ETV Bharat / bharat

இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பு தைரியம் மிக்கது - தலைமை நீதிபதி ரமணா - நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என தைரியமிக்க தீர்ப்பை வழங்கினார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

Indira Gandhi
Indira Gandhi
author img

By

Published : Sep 11, 2021, 11:01 PM IST

உத்தரப் பிரதேசத்தில் புதிய தேசிய பல்கலைக்கழகம் அமைப்பதிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி ரமணா, "1975ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என தைரியமிக்க தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பு நாட்டையே அதிர வைத்தது. இதன் தாக்கத்தின் காரணமாகவே இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். அதன் பின்னர் நடத்த விளைவுகளை நான் இப்போது விவரிக்க விரும்பவில்லை.

150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் தலைசிறந்த சட்ட நிபுணர்களை நாட்டிற்கு அளித்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: குஜராத் அடுத்த முதலமைச்சர் யார் - கவனமாக காய் நகர்த்தும் பாஜக

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.