உத்தரகாசி : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யரா சுரங்கத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியின் 16 வது நாளான நேற்று (நவ. 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது.
-
41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு - தேசிய பேரிடர் மீட்பு படை! #etvbharattamil #etvbharat #UttarakhandTunnelRescue #UttarakhandTunnel #UttarkashiRescue #UttarkashiRescue pic.twitter.com/EfCu51Cz4g
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு - தேசிய பேரிடர் மீட்பு படை! #etvbharattamil #etvbharat #UttarakhandTunnelRescue #UttarakhandTunnel #UttarkashiRescue #UttarkashiRescue pic.twitter.com/EfCu51Cz4g
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 28, 202341 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு - தேசிய பேரிடர் மீட்பு படை! #etvbharattamil #etvbharat #UttarakhandTunnelRescue #UttarakhandTunnel #UttarkashiRescue #UttarkashiRescue pic.twitter.com/EfCu51Cz4g
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 28, 2023
ஏறத்தாழ 24 மணி நேரம் தொடர்ந்த இந்த பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, எலிவளை சுரங்க முறையில் துளையிட்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் 2 மீட்டர் தூரத்தில் சிக்கி உள்ளதாகவும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
All 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, have been successfully rescued. pic.twitter.com/xQq2EfAPuq
— ANI (@ANI) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, have been successfully rescued. pic.twitter.com/xQq2EfAPuq
— ANI (@ANI) November 28, 2023All 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, have been successfully rescued. pic.twitter.com/xQq2EfAPuq
— ANI (@ANI) November 28, 2023
இந்நிலையில், இரவு 8 மணிக்கு மேல் மீட்பு பணி தொடங்கிய நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுரங்கத்தில் சென்று ஓவ்வொரு தொழிலாளர்களாக வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 5 தொழிலாளர்கள் மீட்பட்ட நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் 12 தொழிலாளர்கள் அடுத்தகட்டமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணிகளை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்து உள்ளது.
-
झारखंड समेत विभिन्न राज्यों के मज़दूरों को आज उत्तरकाशी के सिलक्यारा में सकुशल टनल से बाहर निकाला गया है । 17 दिनों तक ये लोग टनल में फँसे रहे लेकिन हिम्मत नहीं हारे । आज ये लोग बाहर निकले हैं तो हम सभी के लिए यह राहत और संतोष की बात है।#UttarkashiRescue pic.twitter.com/X3Sg4fFlQN
— Governor of Jharkhand (@jhar_governor) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">झारखंड समेत विभिन्न राज्यों के मज़दूरों को आज उत्तरकाशी के सिलक्यारा में सकुशल टनल से बाहर निकाला गया है । 17 दिनों तक ये लोग टनल में फँसे रहे लेकिन हिम्मत नहीं हारे । आज ये लोग बाहर निकले हैं तो हम सभी के लिए यह राहत और संतोष की बात है।#UttarkashiRescue pic.twitter.com/X3Sg4fFlQN
— Governor of Jharkhand (@jhar_governor) November 28, 2023झारखंड समेत विभिन्न राज्यों के मज़दूरों को आज उत्तरकाशी के सिलक्यारा में सकुशल टनल से बाहर निकाला गया है । 17 दिनों तक ये लोग टनल में फँसे रहे लेकिन हिम्मत नहीं हारे । आज ये लोग बाहर निकले हैं तो हम सभी के लिए यह राहत और संतोष की बात है।#UttarkashiRescue pic.twitter.com/X3Sg4fFlQN
— Governor of Jharkhand (@jhar_governor) November 28, 2023
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதை முன்னிட்டு கிராம மக்கள் ஆட்டம் பாட்டம், வாண வேடிக்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : உத்தரகாசி சுரங்க விபத்து - முதற்கட்டமாக 5 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!