கர்நாடகா மாநிலம் பாகலூர் பாண்டிகொடிகேஹல்லியை (Bandikodigehalli) சேர்ந்தவர் மேக்ஸி. இவரின் மனைவி, தினமும் வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்புகையில் குடிபோதையில் வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மேக்ஸிக்கும் அவரது மனைவிக்கும் இடையை அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்.9ஆம் தேதி, மனைவி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவியைக் கணவர் கண்டித்துள்ளார். இனிமேல் குடிக்கக்கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளார். இந்நிலையில், மறுநாள் (பிப்.10), பணிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மேக்ஸி, மனைவி வீட்டில் இல்லாததால் குழப்பம் அடைந்துள்ளனர். அவரின் தொலைப்பேசி எண்ணும் சுவிட்ச் ஆப் -ல் இருந்துள்ளது.
இதையடுத்து, பாகலூர் காவல் நிலையத்தில் மனைவி காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினர் அவரின் மனைவி தாயார் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்ததில் தான் உண்மையான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது, குடிப்பதற்காக கணவர் வீட்டில் வாங்கி வைக்கும் சரக்கு பாட்டில்களை, மனைவி குடித்து காலி பண்ணியதால் தான் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், வாக்குவாதம் முற்றியதால் தான், அவர் தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். காவல் துறையினர் அப்பெண்ணைச் சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
தினந்தோறும் கணவர் குடித்துவிட்டு சித்திரவதை செய்வதாக மனைவி கொடுக்கும் புகாரையே பார்த்து பழகிய காவல் துறையினருக்கு, இவ்வழக்கு முற்றிலும் வித்தியாச அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: சரக்கு வாகனத்தைத் திருடிச் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள் - சிசிடிவி வெளியீடு