ETV Bharat / bharat

உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவ் போட்டி!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், ஆசம்கார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச தேர்தல்; அகிலேஷ் யாதவ் போட்டி!

author img

By

Published : Jan 19, 2022, 2:18 PM IST

லக்னோ : உத்தரப் பிரதேச தேர்தல் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாஜக சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மாயாவதி அறிவித்துவிட்டார். தொடர்ந்து அகிலேஷ் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்பாரா? என்பது குறித்து பல்வேறு ஐயங்கள் இருந்துவந்தன.

அகிலேஷ் யாதவ் போட்டி
அகிலேஷ் யாதவ் போட்டி

இந்நிலையில் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது தொடர்பான தகவல்கள் இன்று (ஜனவரி 19) மாலைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 312 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாதி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க : திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் - ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.