ETV Bharat / bharat

ஆப்கான் குறித்து ஏழு நாடு பிரதிநிதிகளுடன் அஜித் தோவல் ஆலோசனை - ஆப்கானிஸ்தான் குறித்து அஜித் தோவல்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து சர்வதேச பிரமுகர்களுடன் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

Ajit Doval
Ajit Doval
author img

By

Published : Nov 10, 2021, 3:24 PM IST

மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை பாதுகாப்பு ஆலோசகர்களிடையே இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் ரஷ்யா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ் ரிபப்ளிக், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்கேற்றன.

இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் வெளியேற்றத்திறக்குப் பின், ஜனநாயக அரசு கவிழ்ந்து தலிபான் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் பேசிய அஜித் தோவல், "நமக்கிடையே நெருக்கமான கூட்டுறவுக்கான தேவை எழுந்துள்ளது. பிராந்திய நாடுகளான நம்மிடையே நம்பிக்கையான சூழல் உருவாகும்பட்சத்தில் அது ஒட்டுமொத்த பிராந்தியமும் பயனாக அமையும்.

ஆப்கனில் நடைபெறும் மாற்றங்களை இந்தியா கூர்ந்து கவனித்துவருகிறது. இதன் தாக்கம் ஆப்கன் மக்களிடம் மட்டுமல்லாது அண்டை நாடுகளிடமும் பிரதிபலிக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெருவிலிருந்து பத்மஸ்ரீ வரை - ரணங்களை வெற்றியாக்கிய சாதனை திருநங்கை மஞ்சம்மா ஜோகதி

For All Latest Updates

TAGGED:

MEA
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.