திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு இன்று காலை 7.52க்கு கிளம்பியது.
இந்த விமானத்தில் கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் தாமதமாக உணர்ந்தனர். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அலுவலர்கள், “விமானம் ஒரு மணி நேரத்தில் திரும்பிவந்துவிட்டது” என்று கூறினர்.
இது குறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “விமானத்தின் கண்ணாடியில் இருந்த விரிசல் முன்னரே கண்டறியப்பட்டிருந்தால் விமானம் புறப்பட்டிருக்காது. இந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை.
சரக்குகள் மட்டுமே இருந்தன. இந்த விமானம் சவுதி அரேபியா சென்று வந்தே பாரத் திட்டத்தின்கீழ் பயணிகளை ஏற்றி இந்தியா திரும்ப இருந்தது” என்றார்.
இதையும் படிங்க : தரையிறங்கிய மாயமான ரஷ்ய விமானம்: நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த 17 பேர்!