ETV Bharat / bharat

'நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது' - அன்பழகன்

author img

By

Published : May 13, 2021, 5:54 PM IST

புதுச்சேரி: நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் நியமனம் செய்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்
அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளரும், முன்னாள் அதிமுக சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன் இன்று (மே 13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மாநில நலன் மற்றும் வளர்ச்சி சம்பந்தமாக மத்திய அரசுடன் ஒரு இணக்கமான அரசு அமையவேண்டும் என்ற அடிப்படையில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக, பா.ம.கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு பதவியேற்றுள்ளது. தற்போது மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனத்தைப் பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சிக்கிறது.

நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவலை பேசுகின்றனர்.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்பது இடங்களை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட், ஜனதா தளம் ஆறு இடங்கள் பெற்று ஆக மொத்தம் 15 இடங்களை மட்டும் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், குறுக்கு வழியில் மத்தியில் பிரதமராக ஆட்சியிலிருந்த வி.பி. சிங் அவர்களது ஆதரவில் மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை திமுக நியமனம் செய்து, அவசர அவசரமாக இரவோடு இரவாக துணை நிலை ஆளுநரை வைத்து பதவிப் பிரமாணம் செய்தனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் சபாநாயகர் மூலம் பதவி ஏற்காத நிலையில், மத்தியில் அங்கம் வகித்த திமுக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமித்து, அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து ஒரு ஜனநாயகப் படுகொலையை திமுக 1990ஆம் ஆண்டே அரங்கேற்றியது.

நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டத்தில் அவர்களுக்கு வாக்குரிமை அளித்து, தனது ஆட்சியைத் தக்க வைத்தது, திமுக. இன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர் நியமனத்தில், மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்றும், நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு எனவும்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக திமுக-வைச் சேர்ந்த தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், திராவிட கழகத்தைச் சேர்ந்த வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விமர்சனம் செய்யும் இவர்கள் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.

நியமன சட்டப்பேரவை உறுப்பினர் நியமனத்தில் தவறு இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய உரிமை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆட்சியை இழந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு, அந்த உரிமை இல்லை. நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் விடயத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தவறு செய்த திமுக-விற்கு அதைப்பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.

புதுச்சேரியில் நேர் வழியில் ஆட்சியமைத்திட மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அவசியம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட திமுக தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியில் அமரத் துடிக்கின்றனர்.

தேர்தலின் போது சகட்டுமேனிக்கு என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமியை விமர்சனம் செய்த திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் முதலைமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு அனுசரணையாக பேசுவது நாடகத்தனமாக உள்ளது. திமுகவின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.