ETV Bharat / bharat

புதுச்சேரியில் அதிமுக செயலாளர்கள் நியமனம்

புதுச்சேரி: மாநில அதிமுக கிழக்கு கழக செயலாளராக அன்பழகனும் மேற்கு கழக செயலாளராக ஓம்சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

AIADMK secretaries appointed in Pondicherry

author img

By

Published : Nov 13, 2020, 10:03 AM IST

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால் அப்பதவி காலியாக இருந்து வந்தது. இதையடுத்து புதுச்சேரி மாநில செயலாளர் பதவி பெறுவது யார் என்பது தொடர்பான போட்டிகள் அதிமுகவினரிடையை இருந்துவந்தது.

இந்த நிலையில் அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை வாயிலாக புதுச்சேரி மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. மேலும் அதில், கிழக்கு பகுதிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கழக செயலாளராகவும், மேற்கு பகுதிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஓம்சக்தி சேகர் கழக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கழக செயலாளரிடம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மேற்கு கழக செயலாளரிடம் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விஷ வண்டு கடித்து உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர்' - முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.