டெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஜூலை 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகத்திற்கு அதிகராமில்லை. விதியை மீறி நடந்த பொதுக்குழுவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளில் 3 வாரங்களில் தீர்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக கட்சி விவகாரங்களில் தற்போதைய நிலையே தொடரட்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் விமான நிலையம் வருகை