ETV Bharat / bharat

பணியமர்த்தலில் உள்ள பாரபட்சங்களை நீக்க ஏஐ தொழில்நுட்ப வசதிகள் சிறந்த வழி...

author img

By

Published : Aug 23, 2022, 6:50 PM IST

ஸ்டார்ட்அப் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களில் பணியமர்த்தலில் உள்ள பாரபட்சங்களை நீக்கவும், திறமையான பணியாளர்களைக் கண்டறியவும் வீடியோ கான்ஃபெரன்ஸ் உள்ளிட்ட AI(Aritficial Intelligence) தொழில்நுட்ப வசதிகள் சிறந்த வழி என ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

AI
AI

டெல்லி: பணியமர்த்தல் செயல்முறைகள் குறித்து, வளர்ந்துவரும் நேரடி ஆட்சேர்ப்பு தளமான ஹைரக்ட் (Hirect) இந்தியா நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையின்படி, ஸ்டார்ட்அப் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களில் பணியமர்த்தலில் உள்ள பாரபட்சங்களை நீக்கவும், திறமையான பணியாளர்களைக் கண்டறியவும் வீடியோ கான்ஃபெரன்ஸ் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்ப வசதிகள் சிறந்த வழி எனத் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து ஹைரக்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜ் தாஸ் விளக்கிக் கூறினார். அவர் பேசுகையில், "நாட்டில் உள்ள பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வீடியோ கால் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகவே ஆள்சேர்ப்பு நடைமுறைகளை செய்கின்றன. சுமார் 50 விழுக்காடு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் வீடியோ கான்ஃபெரன்ஸ் பணியமர்த்தல் செயல்முறையின் முக்கிய பகுதியாக மாறும் என நம்புகிறார்கள்.

நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செய்பவர்களில் 96.5 விழுக்காடு பேர், ஆட்சேர்ப்பு செயல்முறையை மேம்படுத்துவதற்கும், பணியமர்த்தல் செயல்முறையிலிருந்து பாரபட்சத்தை அகற்றுவதற்கும் செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள் சிறந்த வழி என நம்புகிறார்கள்.

தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை போக்க, பன்முகத் தொழிலாளர்களை உருவாக்குவது அவசியம் என்று 52 விழுக்காடு ஆட்சேர்ப்பாளர்கள் கூறியிருந்தாலும், அவர்களில் 97.4 விழுக்காடு பேர் திறன் அடிப்படையிலான பணியமர்த்தல்தான் எதிர்காலம் என்று நம்புகிறார்கள்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேலை தேடுவோரின் தேவைகளுக்கு ஏற்றார்போல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். சுமார் 88.2 சதவீத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், சரியான திறமை உள்ளவர்களை பணியமர்த்த பரிந்துரையே சிறந்த வழி என்று நம்புகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் மீது தாக்குதல் - வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.