வதோதாரா: குஜராத் மாநிலம், வதோதரா பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அப்பெண் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தன்னை ஆண் எனக்கூறி ஒருவர் ஏமாற்றித்திருமணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அப்புகாரில் மேட்ரிமோனி இணையதளம் மூலம் டெல்லியைச்சேர்ந்த டாக்டரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பல ஆண்டுகளாக தனக்கு நோய் இருப்பதாகக் கூறி பல ஆண்டுகள் உறவு கொள்ளாமல் இருந்ததாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்பு பெண்ணாக இருந்த அந்நபர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாகவும்; அந்நபர் மற்றும் அவரின் தாயார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'கடந்த 2006ஆம் ஆண்டு ஜாம்நகரில் அவருக்கும், அவரின் முதல் கணவருக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது' எனக் கூறினார்.
இதனையடுத்து 2011இல் அப்பெண்ணின் முதல் கணவர் கார் விபத்தில் இறந்து விட்டார் எனவும், அப்பெண்ணும், அவரது மகளும் வதோதராவில் உள்ள அவர்கள் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் மேட்ரிமோனி தளத்தில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் விராஜ் ஹர்ஷ்வர்தனுடன் தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து மருத்துவர் ஹர்ஷ்வர்தன் அப்பெண்ணுடன் உறவு கொள்ளாததால் சந்தேகம் ஏற்பட்டதாகவும்; பின் அது குறித்து கேட்டதற்கு உடல் எடை போன்ற சாக்குகளை சொல்லி சமாளித்துள்ளார்.
இந்நிலையில் ஹர்ஷ்வர்தன் பிறப்பில் ஓர் ஆண் இல்லை எனவும், அவரது குடும்பத்தினருடன் ஏமாற்றி இப்பெண்ணை திருமணம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது அந்நபர் கைது செய்யபட்டுள்ளார்.
இதையும் படிங்க:கேரி பேக்கிற்கு பணமா? - டோமினோஸ் நிறுவனத்துக்கு ரூ.8,000 அபராதம்