ETV Bharat / bharat

காதல் திருமணம் செய்த தாயின் ஆசையை பூர்த்தி செய்த மகன் - ஆந்திரா மாநிலம் நர்சிபட்டனம் பகுதி

ஆந்திராவில் இருந்து 56 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து தமிழ்நாட்டிற்கு வந்த தாயின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றியுள்ளார் .

Etv Bharatகாதல் திருமணம் செய்த தாயின் ஆசையை பூர்த்தி செய்த மகன்

author img

By

Published : Sep 20, 2022, 4:29 PM IST

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் நர்சிபட்டனம் பகுதியைச் சேர்ந்த கெளரி பார்வதி என்ற பெண் 56 வருடங்களுக்கு முன் இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்து தமிழ்நாட்டிற்கு வந்தார்.தற்போது 72 வயதாகும் இவருக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

இது குறித்து சில வருடங்களுக்கு முன்பு அவரது மகன் சண்முகராஜிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சண்முகராஜ் சமீபத்தில் அவரது தாயின் ஆசையை நிறைவேற்ற நர்சிபட்டினம் வந்து உறவினர்களை சந்தித்தார். தன் தாய் தன் உடன்பிறப்புகளை பார்க்க எவ்வளவு ஏங்குகிறார் என்பதைக் கூறினார்.

இதனால் உறவினர்கள் அனைவரும் கௌரி பார்வதியை பார்க்க தமிழ்நாடு சென்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன் கெளரி பார்வதி குடும்பத்துடன் நர்சிபட்டினத்தில் உள்ள தனது பிறந்த வீட்டிற்கு வந்தார். அவரது வருகையை உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தமிழ்நாட்டின் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் மின் வேலைக்காக நர்சிபட்டினம் வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருப்பினும் இவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்காததால், தமிழ்நாடு வந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க:போலீஸில் சரண்டைந்தார் 'டூப்ளிகேட் சல்மான் கான்' ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.