ETV Bharat / bharat

23 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியராக தேர்வான எம்எல்ஏ! - ஆந்திர மாநிலம் சோடவரம் தொகுதி

ஆந்திர மாநிலம் சோடவரம் தொகுதி எம்எல்ஏ 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியராக தேர்வாகி உள்ளார்

ஆசிரியர் பதவிக்கு
ஆசிரியர் பதவிக்கு
author img

By

Published : Jun 21, 2022, 8:06 PM IST

ஆந்திரப் பிரசேதம்: ஆந்திர மாநிலம் சோடவரம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான கரணம் தர்மஸ்ரீ கடந்த 1998ஆம் ஆண்டு தனது 30 வயதில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார். அந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஆனால் பல்வேறு பிரச்சனைகள், நீதிமன்றத்தில் வழக்கு ஆகிய காரணங்களால் அவருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அதன்பின்னர் அவர் அரசியலில் களமிறங்கி தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் அண்மையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 1998ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். அதனடிப்படையில் அப்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தற்போதைய எம்எல்ஏ கரணம் தர்மஸ்ரீ ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து எம்எல்ஏ கரணம் தர்மஸ்ரீ கூறுகையில், "1998ஆம் ஆண்டு எனது 30 வயதில் ஆந்திர மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினேன். ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் தேர்வு எழுதினேன். அப்போது வேலை கிடைத்திருந்தால் ஆசிரியராக பணியாற்றி இருப்பேன். சமூக சேவையை விட ஆசிரியர் பணி மேன்மையானது. 1998ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு பேட்ச் சார்பாக முதலமைச்சர் ஜெகனுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காதவர்கள் தொழிலாளியாகவும், மற்றவர்கள் வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தர்மஸ்ரீ அரசியலுக்கு வந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் - அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 11 எம்எல்ஏக்கள் சூரத் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைப்பு?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.