ETV Bharat / bharat

அரசியல் உறுதித்தன்மை கொண்ட தலைவர் கல்யாண் சிங் - அத்வானி புகழாரம் - கல்யான் சிங் குறித்து அத்வானி

தான் கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் உறுதித்தன்மைமிக்க தலைவர் கல்யாண் சிங் என பாஜக மூத்த தலைவர் அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார்.

Kalyan Singh
Kalyan Singh
author img

By

Published : Aug 22, 2021, 12:25 PM IST

பாஜக மூத்த தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் நேற்று (ஆகஸ்ட் 21) காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி கல்யாண் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்வானி தனது இரங்கல் குறிப்பில், "அயோத்தி விவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டவர் கல்யாண் சிங். கட்சிக்கு மிகப்பெரும் பலமாகத் திகழ்ந்தவர்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதில் முக்கிய காரணமாக இருந்தவர். ராம்ஜென்ம பூமி இயக்கத்தில் அவருடன் இனைந்து செயல்பட்ட நினைவுகள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

அடிமட்ட தொண்டராக இருந்து கட்சியின் உறுதியான தலைவராக உயர்ந்தவர் கல்யாண் சிங். பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தொடர்ந்து உழைத்தவர். உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பதவியிலிருந்த கல்யான் சிங், மாநில வளரச்சிக்கு பெரும் பங்கேற்றியுள்ளார். அவருடைய மறைவு பேரிழப்பாகும்" என்றார்.

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்ற கல்யாண் சிங், நேற்றிரவு ஒன்பது மணியளவில் உயிரிழந்ததார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.