ETV Bharat / bharat

பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்த ஆதித்யா எல்1! - Fiji island

Aditya L1 fourth earth bound manoeuvre: ஆதித்யா L1 விண்கலம், பூமியின் நான்காவது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Aditya L1 fourth earth bound manoeuvre
பூமியின் நான்காவது சுற்றுவட்ட பாதையை வெற்றிகரமாக கடந்த ஆதித்யா L1
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 5:16 PM IST

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 விண்கலம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி சி57 (PSLV C57) என்ற ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட ஆதித்யா L1 வெற்றிகரமாக தனியாகப் பிரிந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

  • Aditya-L1 Mission:
    The third Earth-bound maneuvre (EBN#3) is performed successfully from ISTRAC, Bengaluru.

    ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation.

    The new orbit attained is 296 km x 71767 km.… pic.twitter.com/r9a8xwQ4My

    — ISRO (@isro) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனைத் தொடர்ந்து சூரியனை நோக்கி அதன் சுற்றுவட்டப் பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்று கட்டமாக செப்டம்பர் 3, 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தன. அதன்படி ஒன்று, இரண்டு மற்றும் 3வது பூமியின் சுற்றுவட்டப் பாதையை இணைக்கும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

அவை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று (செப் 14) அதிகாலையில் ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை (Earth-bound manoeuvre#4) கடப்பது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த செயல்பாட்டின்போது மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்களில் (ISRO ground station) இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப்பட்டது.

அதேநேரத்தில், ஃபிஜி தீவில் (Fiji island) உள்ள ஆதித்யா எல்1 விண்கலத்திற்கான போக்குவரத்து முனையத்தின் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றும், ஆதித்யா எல் 1-ன் பிந்தைய செயல்பாடுகளின்போது ஆதரிக்கும் என்றும் இஸ்ரோ தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், புதிய சுற்றுவட்டப் பாதையான டிரான்ஸ்-லக்ரேஜியன் பாயிண்ட் 1 இன்செர்ஷனின் (TL1I-Trans-Lagragean Point 1 Insertion) உயரம் 256 கிலோ மீட்டர் X 1,21, 973 கிலோ மீட்டர் என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் செப்டம்பர் 19 ஆம் தேதி என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: AI துறையில் பின்தங்கியுள்ள இந்தியா - வளர்ச்சிபெற வேண்டியதன் அவசியம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.