ETV Bharat / bharat

Aditya L1 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலத்துடன் பிஎஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 12:01 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியன் குறித்து ஆராயச்சியில் ஈடுபட்டு உள்ள, இஸ்ரோ அதன் ஒரு பகுதியாக ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ள இஸ்ரோ, அதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

புவியிர்ப்பு விசையை தாண்டிய பிஎஸ்எல்வி சி-57 மூன்று கட்டங்களை தாண்டி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. ராக்கெட் மூன்று கட்டங்களை வெற்றிகரமாக தாண்டிய நிலையில், பூஸ்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 61 நிமிடங்களில் நிலை நிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.