கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்பைச் சந்தித்துள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு கேரளா அரசு புதிய சமூக நலத்திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், கோவிட்-19 பாதிப்பால் உயிரிழப்பைச் சந்தித்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவியானது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இனிவரும் காலத்தில் உயிரிழப்பு நேர்ந்தாலும் அந்த குடும்பத்தினர் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் உதவித்தொகை வழங்க ஆவண செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அரசு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.
இந்த மாத உதவித்தொகைத் திட்டமானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம்