கர்நாடக மாநிலம் மங்களூருவிலுள்ள விமான நிலையத்தின் விளம்பர பதாகைகளில் தொழிலதிபர் அதானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மங்களூரு விமான நிலையத்தின் இயக்க உரிம அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்த, மங்களூரு விமான நிலைய விளம்பரப் பதாகைகள், விமான நிலையப் பெயர் பொறித்த இடங்களில் அதானியின் பெயரும் இடம் பெறத் தொடங்கியது.
இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கத் தொடங்கினர். இயக்க உரிமை பெற்றாலும் விமான நிலையத்தின் பெயரை மாற்றும் உரிமை அதானி குழுமத்திற்கு இல்லை என தகவல் உரிமை சட்டத்தில் தெரியவந்தது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
இப்படி கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விமான நிலையத்தின் பதாகைகளிலிருந்து அதானி பெயரை மங்களூரு விமான நிலைய நிர்வாகம் நீக்கியுள்ளது. அகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களை இயக்கும் உரிமையை அதானி குழுமம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு