ETV Bharat / bharat

பங்கு வெளியீட்டை திரும்பப் பெற்றது அதானி.. முதலிட்டாளர்களுக்கு பணம் வாபஸ்! - Adani on world richest list

பங்குச் சந்தையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் பொது வெளியிட்டில் இருந்து அதானி நிறுவனம் பின்வாங்கியது. முதலீடு செய்த அனைவருக்கும் நிதி திரும்ப வழங்கப்படும் என அதானி இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது.

அதானி
அதானி
author img

By

Published : Feb 2, 2023, 7:17 AM IST

அகமதாபாத்: பங்குச் சந்தையில் 20ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்ட அதானி நிறுவனம், பொது வெளியீட்டை அறிவித்தது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிண்டன்பெர்க் தனியார் தடயவியல் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் உலகின் மூன்றாவது பணக்காரரான கவுதம் அதானி பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் உள்ள போலி ஷெல் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக அதானி குழுமத்தின் பங்குமதிப்பை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அதானி குழுமத்திற்கு எதிராக ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆராய்ச்சி நிறுவனம் தொடுத்தது. அதானி குழுமத்தின் பொது வெளியிட்டு நேரத்தில் ஆராய்ச்சி அறிக்கை வெளியானதால், அதன் பிரதிபலிப்பு பங்குச்சந்தையில் எதிரொலித்தன. இதனால் பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆகி உள்ள அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் மதிப்பு தொடர் சரிவை சந்தித்தன.

மேலும், ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதானி குழுமம் அறிவித்தது. இதனிடையே ஆய்வு அறிக்கையில் உள்ள கேள்விகளில் ஏறத்தாழ 62 கேள்விகளுக்கு அதானி நிறுவனத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக அதானி குழுமம் 413 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.

மறுபுறம் அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வந்தனர். பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குள் கண்ட வரலாறு காணாத சரிவால் அதானியின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 75 பில்லியன் டாலராக குறைந்தது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்குக் கவுதம் அதானி கீழ் இறங்கினார்.

இந்நிலையில், அதானி குழுமத்திற்கு நிதி திரட்ட வெளியிட்ட பொது பங்குகள் வெளியீட்டை திரும்பப் பெறுவதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை பொது வெளியீட்டில் எதிரொலித்ததாக கூறப்படும் நிலையில், சில்லறை மற்றும் சிறு முதலீட்டாளர்கள் அதானி பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அதேநேரம் பெரு நிறுவனங்கள் அதானி பங்குகளை வாங்க முன்வந்தன. அபுதாபியை சேர்ந்த சர்வதேச ஹோல்டிங் நிறுவனம் ஏறத்தாழ 15 ஆயிரத்து 400 கோடி ரூபாயை அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீடு செய்தன. இருப்பினும் சிறு முதலீட்டாளர்களின் அதானி பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிக்காததால் பொது வெளியீட்டைத் திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அதற்கு தொகை திருப்பி செலுத்தப்படும் என அதானி குழும இயக்குநர்கள் குழு கூறியுள்ளது. 20ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட போதும், சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் பக்கம் நிற்க முடிவு செய்து உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டி? - ஆனந்த் மஹிந்திரா ருசிகரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.