ETV Bharat / bharat

நீச்சல் குளத்தில் கணவர் விக்கிவுடன் நடிகை நயன்தாரா... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! - நயன்தாரா விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்ரேஷ் சிவனின்  புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில்  பகிர்ந்துள்ளார்.புகைப்படத்தில்,இருவரும்  குளத்தின் அருகே அமர்ந்து மகிழ்சியுடன்  பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது.

WikkyNayan
WikkyNayan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 2:35 PM IST

ஹைதராபாத்: ரஜினிகாந்த் உடன் நடித்த "சந்திரமுகி" படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் தொடர்ந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாகப் புகழப்படுகிறார்.

இந்நிலையில் 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை நயன்தாரா, இத்திரைப்படத்தில் நர்மதா என்ற கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறார். மேலும் திரை பிரபலங்கள் பலர் நயன்தாரா நடிப்பிற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'ஜவான்' படத்தின் வெற்றியால் நடிகை நயந்தாரா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.ஜவான் கடந்த செப்டம்பர் 7 அன்று திரையரங்கில் வெளியாகி இதுவரை பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. படம் வெளியாகி 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் இப்படம் 797.50 கோடி வசூல் செய்துள்ளது. இதையடுத்து இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சென்னையில் நடந்த ப்ரோமோஷன் விழாவில் நயன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் நயன்தாரா வரவில்லை. இந்நிலையில் வெற்றி விழா நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதனையடுத்து நயன்தாராவின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள் என்று தான் அவர் கலந்துகொள்ளவில்லை என்று மேடையில் ஷாருக்கான் கூறி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்ரேஷ் சிவனின் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், இருவரும் குளத்தின் அருகே அமர்ந்து மகிழ்சியுடன் பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது.

நயன்தாரவின் அடுத்த படம் ‘இறைவன்’, இதில் அவர் ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நயன்தாரா தனது 75வது படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இதன் பிறகு நயன்தாரா ‘டெஸ்ட்’, ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் நயன்தாரா மற்றும் விக்ரேஷ் சிவன் ஆகியோர் தங்கள் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Tamannaah Bhatia: கருப்பு உடையில் கிறங்கடிக்கும் ”காவாலா” நாயகி க்ளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.