ETV Bharat / bharat

நாடாளுமன்ற தேர்தலில் அபிஷேக் பச்சன் போட்டி? சமாஜ்வாதி கட்சியில் விரைவில் இணைகிறார்?

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Abhishek Bachchan
Abhishek Bachchan `
author img

By

Published : Jul 15, 2023, 9:39 PM IST

லக்னோ : பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் அபிஷேக் பச்சன் விரைவில் இணைய உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மக்களவை தொகுதியில் அபிஷேக் பச்சன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த 1984ஆம் ஆண்டு இதே பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு அமிதாப் பச்சன் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய அமிதாப் பச்சன், லோக் தள் கட்சித் தலைவர் ஹெம்வதி பகுகுனாவை 1 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தற்போது, அபிஷேக் பச்சனின் தாயார் ஜெயா பச்சனும் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அதன் காரணமாக அபிஷேக் பச்சன் சமாஜ்வாதி கட்சியில் விரைவில் இணைந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரயாக்ராஜ் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக எம்.ப. ரீடா பகுகுனாவின் மகன் மயங்க் ஜோஷி அண்மையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். எனவே பிரயாக்ராஜ் தொகுதியில் பாஜக சார்பில் ரீடா பகுகுனா போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உத்தர பிரதேச அரசியலின் மையப் புள்ளியாக பிரயாக்ராஜ் தொகுதி காணப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரீடா பகுகுனா பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று இருந்தார். தற்போது அவர மகன் மயங்க் ஜோஷி சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரீடா பகுகுனாவுக்கு பாஜக சார்பில் இடம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இதற்கும் முன் கடந்த 1984ஆம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஏறத்தாழ 1 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனால் அதே பிரயாக்ராஜ் தொகுதியில் அபிஷேக் பச்சனை நிற்க வைத்து தொகுதியை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ராஜ்ய சபா எம்பி ஆகிறார் அண்ணாமலை? - ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.