ETV Bharat / bharat

Oppositions Bengaluru meet: ஆம் ஆத்மி, திரிணாமுல் பங்கேற்பு.. தொகுதி பங்கீடு சாத்தியமா?

author img

By

Published : Jul 16, 2023, 7:43 PM IST

ஜூலை 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது. அதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Aam Admi
Aam Admi

டெல்லி : பெங்களூருவில் நாளை (ஜூலை. 17) நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் ஏறத்தாழ 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது, அடுத்த பிரதமர் யார்?, நாடாளுமன்ற தேர்தல் யுக்திகள் என்னென்ன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்வதாக மேற்கு வங்கள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள் உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.

டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்து இருப்பது டெல்லி மக்களுக்கு சாதகமான வளர்ச்சியாக உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.

முன்னதாக டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக அறிவிக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். அதேநேரம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை. 16) சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : டெல்லி அவசர சட்டம்: காங்கிரஸ் எதிர்ப்பு.. ஆம் ஆத்மி பெருமிதம்... பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.