டெல்லி : சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. உலகின் சக்தி வாய்ந்த, பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மிக முக்கிய நாடுகளான இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை கொண்ட அமைப்பாக ஜி20 திகழ்கிறது.
உலப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் உறுப்பினர் நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா கொண்டு உள்ளது.
கடைசியாக கடந்த 2022 ஆண்டு இந்தோனேஷியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அதன் இறுதியில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி20 தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஜி20 அமைப்பின் கீழ் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பொருளாதாரம், நிதி சார்ந்த நடவடிக்கைகள், மருத்தும் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சுழல், வணிகம் சார்ந்தது மற்றும் தொழில்நுட்பத்தின் உலக பார்வை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாட்டின் 40க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த கூட்டங்களின் உச்சமாக இன்றும் (செப். 9) நாளையும் (செஒ. 10) தலைநகர் டெல்லியில், ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உறுப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியா விரைந்து உள்ளனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உக்ரைன் போரால் ஏற்பட்டு உள்ள சர்வதேச பொருளாதாரம் சுணக்கம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர உலகளாவிய வறுமை மற்றும் பட்டினி மற்றும் பஞ்சம், உலக சவால்களை எதிர்கொள்ள தேவையான உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் உலக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் புத்தாக்கம், பருவநிலை நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தலைநகர் டெல்லி விழாக் கோலம் பூண்டு உள்ளது. முக்கிய நகரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் டெல்லியில் முக்கிய நகரங்கள் மற்றும் வீதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
முக்கிய வீதிகள் மற்றும் நகரங்கள் புதுப்பொலிவு பெற்று மிண்ணுகின்றன. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் 28 அடி உயர 15 டன் எடையில் பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. விருந்தினர்களை உபசரிக்க தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டுகள், டம்ளர்களில் விருந்தினருக்கு உணவுகள் பரிமாறப்படுகின்றன. பலவகை உணவுகள் தயாரிக்க ஐடிசி, தாஜ் உள்ளிட்ட 11 முக்கிய உணவு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியா நடத்தும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், ஸ்பெயின் அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்பெயின் அதிபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்து உள்ளார்.
அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு பதிலாக அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர், முக்கிய பிரதிநிதிள் ஜி 20 கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பைடன் இந்தியா வந்து உள்ளார். அதிபராக பதவியேற்ற பின் முதல்முறையாக அதிபர் பைடன் இந்தியா வந்து உள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ், தென் ஆப்பிரிக்க தலைவர், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தியா விரைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்திலும், மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. உலக விருந்தினர்கள் வியக்கும் வகய்
இதையும் படிங்க : பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!