பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிஐடியின் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்தவர் லக்ஷ்மி. 33 வயதான இவர் நேற்று (டிச. 16) இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்கு இரவு விருந்திற்காகச் சென்றுள்ளார்.
விருந்து முடித்துவிட்டு நண்பரின் வீட்டில் உள்ள அறைக்குத் திரும்பிய லக்ஷ்மி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இவரது சடலத்தை மீட்ட காவலர்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
காவல் துறை விசாரணை
காவல் துறையின் விசாரணையில், இவர் 2014ஆம் ஆண்டு கர்நாடக பொதுச் சேவைப் பிரிவில் இணைந்தார். பின்னர், 2017ஆம் ஆண்டிலிருந்து சிஐடி பிரிவில் பணியாற்றிவரும் இவர், தற்போதுவரை பெங்களூருவில் சிஐடி சட்ட விசாரணை பிரிவில் பணியாற்றிவந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நவீன் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குடும்பப் பிரச்னை இருந்துவந்ததாகத் தெரிகிறது.
இவரது தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் அறியப்படாததால், காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்கொலை எண்ணம் நீங்க தொடர்புகொள்ளுங்கள்...
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: கணவரின் சந்தேகம் காரணமா?