போர்ட்லேண்ட்: உலகில் மற்ற போக்குவரத்து சேவையைக் காட்டிலும் விமான சேவை அதிகரித்து வருகின்றது. அதற்கு காரணம் முன்பைவிட தற்போது விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக மக்கள் என்னுகின்றனர். அதுமட்டுமின்றி அதிகளவில் நேரம் சேமிக்கப்படுவதால் விமான சேவைக்கு இவ்வளவு டிமாண்டு.
மேலும் விமான சேவையில் அதிகளவு சோதனைகள் உள்ளதே, விமான சேவை வளர்ச்சியடையக் காரணம். இருப்பினும் சிலர் இதனை தவறான வழியிலும் பயன்படுத்துகின்றனர் எனலாம். அதுபோல ஒரு சம்பவம் அமெரிக்காவிலும் தற்போது நிகழ்ந்து பயணிகளை பதற வைத்துள்ளது.
அதாவது, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு செல்லும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஹாரிஸ்ன் ஏர் எம்பரர் இ 175 என்ற விமானம் வழக்கம் போல் சுமார் 80 பயணிகளுடன் கிளம்பியுள்ளது. அப்போது அதில் கூடுதல் இருக்கையில் பயணித்த ஒருவர் திடீரென விமானியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு விமானத்தின் என்ஜினை அனைக்க முயற்சி செய்துள்ளார்.
அதனைக் கண்டு சுதாரித்த விமான பைலட் துரிதமாக செயல்பட்டு அவரைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் ஒரு நிமிடத்தில் பயத்தின் எல்லைக்கே சென்று வந்ததாகக் கூறுகின்றனர். அதனையடுத்து அந்த நபரை பிடித்த அதிகாரிகள், பாதுகாப்புக் காரணமாக விமானம் உடனடியாக அருகில் இருந்த ஓரிகார் விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
மேலும் பைலட்டின் துரிதமான இந்த செயலால் விமானத்தில் பயணித்த 80 பயணிகளின் உயிரும் தப்பியது எனலாம். அதனைத் தொடர்ந்து அக்.22 ஆம் தேதி அந்த பயணியை கைது செய்த போலீசார், ஏன்? எதற்காக இப்படி நடந்தது என பல கோணங்களில் விசாரித்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர் ஜோசப் டேவிட் எமர்சன் என்பதும், 44 வயதான இவரும் ஒரு பைலட் என்பதும், தற்போது ஜோசப் எமர்சன் பணியில் இல்லாமல் ஓய்வில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜோசப்பின் நண்பன் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று அவர் கூறியதாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தனது மனநிலை மிகவும் மோசமான காரணத்தால், சைகாடெலிக் காளானை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த காளான் என்பது ஒரு வகையான மேஜிக் காளான்கள் எனவும், இது அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்ட காளான்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் விமானத்தின் என்ஜினை அனைப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு சைகடெலிக் காளான்களை எடுத்துக் கொண்டதாகவும், அதன் பிறகு அவர் சுமார் 40 மணி நேரமாக தூங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஓரேகானில் உள்ள அரசு வழக்கறிஞர் ஒருவர் ஜோசப்பிற்கு எதிராக விமானத்திற்கு பயணித்த பணிகள் உட்பட சுமார் 83 பேரை கொலை செய்ய முயற்சித்ததாக, 83 கொலை முயற்சி வழக்குகளை அவர் மீது தாக்கல் செய்தார். பின் ஜோசப்பின் வழக்கறிஞர் அவர் சார்பாக மனுவையும் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த வழக்கில் விமானத்தின் என்ஜினை அனைக்க முயன்றதற்காக, சுமார் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக போலீசார் கூறியதாவது, விமான பணிகளை சோதிக்கும் போது ஜோசப் போதையில் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை, அதனால் தான் அவரை சோதனை செய்யும் போது யாரும் தடுக்கவில்லை, அதுமட்டுமின்றி ஜோசப் எமர்சன் இந்த காளான்களை எடுத்துக் கொள்வது இதுதான் முதல் தடவை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கை அணியில் இனி இவருக்கு பதில் இவர்.. யார் அவர்?