ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த இடான் சிங் என்பவர், தனது மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண்மணி, நேற்று (ஜூன் 19) தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லோஹாவத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்மணிக்கு 24 வயது என்றும், இரண்டு வயது ஆண்குழந்தை மற்றும் 7 மாத ஆண் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாகதோஷம் உள்ளதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது