ETV Bharat / bharat

Arvind kejriwal:தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் - அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு! - meeting with Arvind Kejriwal and Chandrasekhar Rao

அவசர சட்டம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி ஆதரவு கோரி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு இன்று தெலங்கானாவில் நடைபெற்றது.

Arvind kejriwal:தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் - அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு!

author img

By

Published : May 27, 2023, 7:02 PM IST

ஹைதராபாத்: டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றுவது விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார். டெல்லியை ஆளும் ஆத்மி அரசுக்கு குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் இல்லை. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு அதிகாரங்கள் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்தது.

எனவே, இந்த அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என கடந்த 2019-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது எனக் கூறி அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். ஆனால் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு உடன்படவில்லை. எனவே, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்தால் அதிருப்தி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் இச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க, தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவை திரட்டி வருகிறார். அதன் முதல் பயணம், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி உடனான சந்திப்பில் தொடங்கி பின்னர் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிராவில் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து ஆதரவு பெற்றார்.

அதன் பின் மே 25-ஆம் தேதி தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்து அவரது ஆதரவையும் திரட்டினார். இந்நிலையில், ஹைதராபத்தில் இன்று (மே 27) அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மீறுவதாகக் கூறி, மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக பாரத ராஷ்டிர சமிதியின் ஆதரவைக் கோரினார்.

மேலும், இந்த பேச்சு வார்த்தையில், கேஜ்ரிவாலுடன் பஞ்சாப் பிரதமர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், “ மோடி அரசு டெல்லி மக்களை அவமதிக்கிறது. இதில் சந்தேகத்திற்கு எவ்வித அவசியமும் இல்லை. மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் மேற்கொள்ளும் உரிமை உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், "பிரதமர் மோடி அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை நீங்கள் செயல்பட அனுமதிக்கவில்லை” என்றும் கூறினார். மேலும், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டதற்கு மோடி அரசுக்கு கர்நாடக தேர்தலில் மக்கள் பாடம் கற்பித்தது போல இனி வரும் தேர்தலிலும் நிகழும்” எனக் கூறினார்.

அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சியும் தான் டெல்லி மக்களையும் மற்றும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டும். இந்த அவசர சட்டம் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக உள்ளது. இதனை எதிர்க்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உறுதுணையாக இருப்பதற்கு நன்றி” எனக் கூறினார்.

இதையும் படிங்க: Arvind Kejriwal: சரத் பவார் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலில் ஏற்பட உள்ள திருப்பம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.