வங்கதேச நாட்டின் பிதாமகனாக கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் பிறந்த தினம் இன்று(மார்ச் 17) அனுசரிக்கப்படுகிறது. இதற்கு தனது புகழஞ்சலியை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பங்கபந்து ஷேக் முஜ்பூர் ரஹ்மான் மனித உரிமை, சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். அவர் இந்தியர்களுக்கும் ஒரு நாயகன்தான். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வங்கதேசம் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளரார்.
ஷேக் முஜ்பூர் ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் 26, 27 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் செல்கிறார். கோவிட்-19 பரவலுக்குப் பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து உயரும் கோவிட்-19; ஒரு நாளில் 28,903 பேருக்கு பாதிப்பு