ETV Bharat / bharat

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு - பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 15, 2022, 3:13 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் மஞ்சகோட்டில் இன்று (செப். 15) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ரஜோரி போலீசார் தரப்பில், "பூஞ்ச் ​​மாவட்டம் சூரன்கோட்டில் இருந்து ரஜோரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட பேருந்து மஞ்சகோட் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம். அப்போது 5 சம்பயிடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களோடு உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் ​​மாவட்டத்தின் மண்டியில் நேற்று நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகன ஓட்டி மீது ஏறிய லாரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.