ETV Bharat / bharat

வீடியோ: நொடியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - துவாரகா சிறுமி ஆசிட் வழக்கு

டெல்லியில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A boy has thrown acid on a schoolgirl in Delhi

author img

By

Published : Dec 14, 2022, 3:41 PM IST

நொடியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு

டெல்லியின் துவாரகாவில் உள்ள உத்தம் நகர் அருகே இன்று (டிசம்பர் 14) காலை 7.30 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த 2 பேர் ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சிறுமி தனது தங்கையுடன் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் நொடியில் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சிறுமியின் அலறலை கேட்ட பாதசாரிகள் அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். சிறுமியின் இரு கண்களிலும், முகத்திலும், ஆசிட் பட்டுள்ளது. இருப்பினும், உயிருக்கு ஆபத்தில்லை. கண்களின் செயல்பாடு குறித்து விரைவில் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் விசாரணை பெண் மீது துப்பாக்கிச்சூடு - நடுரோட்டில் நடந்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.