ETV Bharat / bharat

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா - கரோனா தொற்று 2-வது அலை

ஹரித்வாரில் நடந்து முடிந்த கும்பமேளாவில் இருந்து திரும்பி வந்த 61 பேரில், 60 யாத்ரிகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : May 4, 2021, 7:58 PM IST

விடிஷா (மத்தியப் பிரதேசம்): உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்து முடிந்த கும்பமேளா திருவிழாவில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

v
ஹரித்வார்:கும்பமேளா

நாட்டில் கரோனா தொற்று இரண்டாது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நடத்தப்பட்ட கும்பமேளா திருவிழா கரோனா வைரஸை பரப்பும் சூப்பர்-ஸ்ப்ரெட்டர் என்று சொல்லப்படுகிறது. கரோனா தொற்றின் இரண்டாவது அலைகளின் கீழ் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கையில், மற்றொரு அதிர்ச்சியூட்டும் பாதிப்பு எண்ணிக்கை மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்து திரும்பி வந்த நபர்களில் கிட்டத்தட்ட 100 சதவீதம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஹரித்வாரில் கும்பமேளாவிலிருந்து திரும்பிய விடிஷா மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேரில், 60 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கயாராஸ்பூரிலிருந்து கும்பமேளாவில் புனித நீராடுவதற்குச் சென்ற 83 பேரில் 60 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 22 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹரித்வாரில் உள்ள மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தவர்களைக் கண்டுபிடித்து, கரோனாவுக்கு சோதனை செய்து அவர்களைத் தனிமைப்படுத்த விடிஷா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதில், யாத்ரிகர்கள் ஏப்ரல் 11 முதல் 15 வரை வெவ்வேறு பேருந்துகளில் ஹரித்வார் சென்றிருந்தனர். அவர்களில், கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த 22 பேர் அப்பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளனர், இந்நிலையில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி இதுவரை கும்பமேளா சென்று திரும்பிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், ஹரித்வாரில் இருந்து திரும்பும் பக்தர்களைப் பற்றிய தகவலைப் பொறுப்புள்ள குடிமக்கள் யார் வேண்டுமானாலும், அலுவலர்களுக்குத் தெரியப்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.