டெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திங்கள்கிழமையன்று 8,500 கி.மீ நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான திட்டங்கள் 2022 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
2021-22 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, நிதியமைச்சர், “மேற்கு வங்கத்தில் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்களை காண முடியும்” என்றார்.
மேலும், “சாலை உள்கட்டமைப்பை மேலும் அதிகரிக்க, 2022 மார்ச் மாதத்திற்குள் 8,500 கி.மீ சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். அதில், ரூ .65,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் கேரளாவில் மேற்கொள்ளப்படும். இதுதவிர, மேற்கு வங்கத்திலும் ரூ.25,000 கோடி திட்டங்களும், அஸ்ஸாமில் ரூ.3,400 கோடி சாலை திட்டங்களும் அமைக்கப்படும். அதேபோல், நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்தை அதிகரிக்க ரூ.18,000 கோடி திட்டம் அறிவிக்கப்படும்” என்றார்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாளொன்றுக்கு 40 கிலோ மீட்டர் வீதம் 2,500 கி.மீ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் உள்பட ஐந்து ஆண்டுகளில் 60,000 கி.மீ நெடுஞ்சாலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் பொருளாதார, எல்லை சாலைகள் 9,000 கி.மீட்டரும், கடலோர சாலைகள் 2,000 கி.மீட்டரும் அடங்கும். இவை தவிர, 100 சுற்றுலா தலங்கள், 45 நகரங்கள் நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்படும்” என்று கூறினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: புதிய சாலை அமைப்பு குறித்தான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!