ETV Bharat / bharat

கட்டட வேலையில் ‘லிஃப்ட்’ அறுந்து விழுந்த விபத்து - 8 ஊழியர்கள் பலி!

குஜராத்தில் அஸ்பயிர் நிறுவனத்தின் கட்டட வேலையில் லிஃப்ட் விழுந்த விபத்தில் கட்டுமான வேலை செய்துவந்த 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டட வேலையில் ‘லிப்ட்’ விழுந்த விபத்தில் 8 ஊழியர்கள் பலி...!

author img

By

Published : Sep 14, 2022, 7:18 PM IST

அஹமதாபாத்(குஜராத்): குஜராத் பல்கலைக்கழகம் அருகே அஸ்பயிர் 2 எனும் கட்டடத்தின் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்தக் கட்டட வேலையில், ஏழாம் மாடியிலிருந்து லிஃப்ட் கீழே அறுந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியைத்தொடங்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்டனர். இன்று(செப்.14) காலை 9:30 மணியளவில் இந்தச்சம்பவம் நடந்தேறியுள்ளது. ஊழியர்கள் கட்டட வேலைகளில் மும்முரமாக இருக்கையில் நொடிப்பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தேறிவிட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச்சம்பவம் குறித்து தீயணைப்பு அலுவலர் ஜயேஷ் காடியா கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு யாரும் தகவல் அளிக்கவில்லை. நாங்கள் சமூக வலைதளத்திலேயே இதுகுறித்து அறிந்தோம். தகவலறிந்ததும், இங்கு விரைந்து வந்தோம். இந்த கட்டடத்திற்குப் பொறுப்பாளர் என எவரையும் இங்கு காணவில்லை” என்றார்.

இறந்தவர்களின் பெயர்கள் கீழ் வருமாறு, சஞ்சய் பாபுபாய் நாயக், ஜகதீஸ் ரமேஷ்பாய் நாயக், அஸ்வின் சோம்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், ராஜ்மால் சுரேஷ்பாய் காரடி மற்றும் பங்கஜ் சங்கர்பாய் காரடி.

இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைப் போராட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.