பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக விபசார விடுதிகள் இயங்குவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கெங்கேரி, சோழதேவனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் வாடகைக்கு வீடு எடுத்து விபசார விடுதி நடத்தி வந்த கும்பல் கையும் களவுமாக சிக்கியது.
சோதனையில் விபசார விடுதி நடத்திய 2 பெண்கள் உள்பட 8 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட வெளிநாட்டினர், இந்தியாவில் நீண்ட நாட்களாக வசித்து வருவதாகக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்த ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான வங்காள தேச சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், பிடிபட்டவர்கள் உண்மையிலேயே இந்தியாவில் வசித்து வருகிறார்களா, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன், மின்சாரம் இல்லாத அதிசய கிராமம்.. இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள்!