ETV Bharat / bharat

BOMB: பீகாரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாத சதித்திட்டம் எனத் தகவல்! - நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி

பீகாரில் பயங்கரவாத சதிச் செயல்களுக்காக பதுக்கி வைக்கப்பட்டதாக மீன் கன்டெய்னரில் இருந்து 8 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BOMB
BOMB
author img

By

Published : Jan 13, 2023, 10:02 PM IST

வைசாலி: பீகார் மாநிலம், ஹஜிபூர் நாகர் பகுதியில் வெடிகுண்டு பதுக்கல் நடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், பழக்கடை ஒன்றில் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சோதனையில், பழக்கடையில் மீன் கன்டெய்னரில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 8 நாட்டு வெடிகுண்டுகளை அந்த பழக்கடையில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்ததாக பழக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காத வகையில், பாதுகாப்பான இடங்களுக்குப் போலீசார் மாற்றினர். மேலும் பழக்கடையில் நாட்டு வெடிகுண்டு பதுக்கலில் ஈடுபட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பயங்கரவாத சதிச்செயல்கள் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கல் நடந்து இருப்பதாகவும் தெரிய வந்ததாகப் போலீசார் கூறினர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக பயங்கரவாத கும்பல் ஊருக்குள் சுற்றித் திரிகிறதா எனவும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Masthan Murder: சாதிக் பாஷா கொலையைப்போல சந்தேகம் - மஸ்தானின் தம்பி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.