ETV Bharat / bharat

பெங்களூரு கோர விபத்து: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் உள்பட 7 பேர் மரணம் - 7 people killed in a major car accident

பெங்களூருவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் திமுக எம்எல்ஏ மகன், அவரது மருமகள் உள்பட ஏழு பேர் மரணமடைந்தனர்.

Bengaluru
பெங்களூரு
author img

By

Published : Aug 31, 2021, 9:32 AM IST

Updated : Aug 31, 2021, 11:18 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா (koramangala) பகுதியில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆடி கார் (audi car) , மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காரின் முன் இருக்கையில் மூன்று பேரும், பின் இருக்கையில் நான்கு பேரும் அமர்ந்திருந்ததாகத் தெரிகிறது.

பெங்களூரு கோர விபத்து
பெங்களூரு கோர விபத்து

இந்த விபத்தில் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய் பிரகாஷின் மகன் கருணா சாகர், மருமகள் பிந்து (28) ஆகியோரும் உயிரிழந்திருப்பது அக்குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru
ஒய் பிரகாஷின் மகன் கருணா சாகர்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அடுகோடி (Adugodi) காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது ஆசிட் வீச்சு- உ.பி.யில் நிகழ்ந்த கொடூரம்

Last Updated : Aug 31, 2021, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.