ETV Bharat / bharat

மினி டிரக் - பயணிகள் வாகனம் நேருக்கு நேர் மோதல் - 7 பேர் பலி! - odissa

கோழி ஏற்றி வந்த மினி டிரக்கும் பயணிகள் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 12:25 PM IST

ஜெய்ப்பூர்: நியூல்பூர் அருகே கோழி ஏற்றி வந்த மினி டிரக்கும், பயணிகள் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து பயணிகள் வாகனத்தில் ஒரு குழு, ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

அதேபோல் எதிர்புறம் கொல்கத்தாவில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி டிரக் ஒன்று, வந்துள்ளது. நியூல்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மினி டிரக், எதிர்திசையில் வந்த பயணிகள் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் வாகனத்தில் வந்த 6 பேர் சம்பவ இடத்ததிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மினி டிரக்கின் முகப்பு பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் உயிரிழந்தவர்களை உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், எதனால் விபத்து ஏற்பட்டது என்றும், மினி டிரக்கில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து அரங்கேறியதா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அமித்ஷா மாநாட்டில் கலந்து கொண்ட 14 பேர் பலி - பேருந்து விபத்தில் பலியான பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.