ETV Bharat / bharat

குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்ற 6 பழங்குடியினத் தலைவர்களுக்கு வீட்டுச்சிறை!

மேற்கு வங்கத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க திட்டமிட்ட 6 பழங்குடி அமைப்புகளின் தலைவர்களை மேற்கு வங்க காவல்துறை வீட்டுக்காவலில் வைத்தது. அவர்கள் தியோச்சா - பச்சாமி நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து முர்முவிடம் கோரிக்கை வைக்க இருந்தனர்.

Tribal
முர்மு
author img

By

Published : Mar 28, 2023, 9:37 PM IST

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில், பீர்பூம் மாவட்டத்தில் உள்ள தியோச்சா - பச்சாமி நிலக்கரி சுரங்கத்தை மிகப்பெரிய சுரங்கமாக விரிவாக்கம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுரங்கத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பழங்குடி கிராமங்களில் இருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தங்களது கிராமங்களில் விதிகளை மீறி நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், அரசு அதிகாரிகள் தங்களை மிரட்டி நிலங்களை பிடுங்குவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். தங்களது சொந்த இடத்திலிருந்து தங்களை வெளியேற்றும் மேற்குவங்க அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (மார்ச்.28) வருகை தந்தார். இதனிடையே பல்வேறு பழங்குடியின அமைப்புகள் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டனர். தியோச்சா - பச்சாமி நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து முர்முவிடம் கோரிக்கை வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

அதேபோல், பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் கோரிக்கை வைக்க இருந்தனர். இதுதொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். கடைசி நேரத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் முர்மு இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஆறு பழங்குடி அமைப்புகளின் தலைவர்களை மேற்கு வங்க போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்கக்கூடாது என்பதற்காக வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ராம் சோரன், சோனா முர்மு, பினாய் குமார் சோரன், மின்டி ஹெம்ப்ராம், ரத்தின் கிஸ்கு, ஷிபு சோரன் ஆகிய ஆறு பேர் இன்று காலை 6 மணி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களது வீடுகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். முர்மு நிகழ்ச்சி முடிந்து செல்லும்வரை அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என போலீசார் எச்சரித்ததாகத் தெரிகிறது. மேற்குவங்க அரசின் இந்த நடவடிக்கைக்கு பழங்குடியின மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உமேஷ் பால் கொலை வழக்கு : பிரபல தாதா அடிக் அகமதுக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.