ராஜஸ்தான் மாநிலம், கான்பூர் மினாகிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கமாண்டி சிங். இவர் இன்று அதிகாலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீ பகவான், புஷ்பேந்திரா, மங்கல் சிங் உள்பட ஆறு பேர் ஒன்று சேர்ந்து கமாண்டி சிங்கை சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு கமாண்டி சிங்கின் மகன் பானியா சிங் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த கமாண்டி சிங்கின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி நிர்வாகி கொலை முயற்சி: கூலிப்படை அட்டகாசம்