ETV Bharat / bharat

இமாச்சல் நிலச்சரிவு - உயிரிழப்பு 23ஆக உயர்வு

இமாச்சலப்பிரதேச மாநிலம், கின்னௌரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

Himachal Pradesh
Himachal Pradesh
author img

By

Published : Aug 14, 2021, 7:34 PM IST

இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னௌரில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் உள்ளிட்டவைகள் சிக்கின.

கடந்த மூன்று நாள்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இன்னும் ஒன்பது பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்புப்பணியில் மாநில பேரிடர் மீட்புக்குழுவுடன், இந்தோ-திபெத் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும் ஈடுபட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் முடக்கப்பட்டிருந்த சாலைப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து மலையிலிருந்து கற்கள் விழுந்துவருதால், இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாகா எல்லையில் பாகிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.