ETV Bharat / bharat

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்: நரேந்திரபூரில் 56 குண்டுகள் பறிமுதல்!

author img

By

Published : Mar 29, 2021, 10:59 AM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் நரேந்திரபூரில் மார்ச் 27-28 தினங்களுக்கு இடைப்பட்ட இரவில் 56 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

WB polls West Bengal West Bengal polls Narendrapur bombs bombs recovered in Narendrapur bombs recovered in Bengal EC Election Commission West Bengal Police r சட்டப்பேரவை மேற்கு வங்கத்தில் நரேந்திரபூரில் 56 குண்டுகள் பறிமுதல் குண்டுகள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில், காவலர்கள் கன்டிபோட்டா பகுதியிலுள்ள பெரி பகுதியில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது வெடிகுண்டு ஒன்று சிக்கியது. இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் நரேந்திரபூரில் 56 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் குண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல் உயர் அலுவலர் அலி மொல்லா கூறுகையில், “குட்டி மற்றும் அசனுல் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது விசாரணை நடத்திவருகிறோம்.

மாநிலத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிசெய்வோம்” என்றார். மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடந்தது. அப்போது, 79.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 30 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்ட தேர்தலில் 191 பேர் போட்டியிட்டனர். அதில் 21 பேர் பெண்கள்.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட (8) வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு, முதல்கட்ட வாக்குப்பதிவே சாட்சி- அர்ஜுன் முண்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.