ETV Bharat / bharat

இந்தியா முழுவதும் 38 விமான விபத்துகள்.. 49 பேர் உயிரிழப்பு.. மாநிலங்களவையில் வி.கே.சிங்..

author img

By

Published : Dec 12, 2022, 9:15 PM IST

இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் 38 விமான விபத்துகள் நடந்துள்ளதாகவும், அதில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் 38 விமான விபத்துகள்
இந்தியா முழுவதும் 38 விமான விபத்துகள்

டெல்லி: இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் 38 விமான விபத்துகள் நடந்துள்ளன. அதில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோழிக்கோடு விமான விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என்று விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் இன்று (டிசம்பர் 12) மாநிலங்களவையில் தெரிவித்தார். அதோடு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு விமான சட்டம், 1972இன் படி வழங்கப்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்கவும், நாட்டில் விமானங்கள்/ஹெலிகாப்டர்களை பாதுகாப்பான முறையில் இயக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியா மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தனியார் விமான நிலைய குழுக்கள் முடிவு செய்துள்ளன என்று விகே சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு..? - எம்.பி. மோடி வைத்த கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.