சென்னை: மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளில் 3 இந்திய ஆடவர் அணிகளும் வெற்றி கண்டன.
இந்திய ஏ அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. இதில் சந்தோஷ் குஜ்ராத்தி மாகோடோ ராட்வெல்லை 49ஆவது நகர்த்தலிலும், அர்ஜூன் மசாங்கோ ஸ்பென்சரை 38ஆவது நகர்த்தலிலும், நாராயணன் முஷோர் எமரால்டு டகுட்ஸ்வாவை 33ஆவது நகர்த்தலிலும், சசிகிரண் கிருஷ்ணன் ஜெம்பா ஜெமுஸ்ஸேவை 39ஆவது நகர்த்தலிலும் வீழ்த்தினர்.
இந்திய பி அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் குகேஷ், சரின் நிகில், அதிபன், சத்வானி ரவுனக் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். இந்தியா சி அணி தெற்கு சூடானுடன் மோதியது. சேதுராமன் 50ஆவது நகர்த்தலில் ரெஹான் டெங் சைப்ரியானோவையும் , குப்தா அபிஜித் 51ஆவது நகர்த்தலில் அஜாக் மச் டுவானியையும் , கார்த்தியேகன் முரளி 39ஆவது நகர்த்தலில் காங் தோன் காங்கையும், புரானிக் அபிமன்யூ 48ஆவது நகர்த்தலில் பீட்டர் மஜூர் மன்யாங்கையும் வீழ்த்தினர்.
இந்தியா இன்று களம் கண்ட 24 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் - இந்திய மகளிர் அணிகள் அபாரம்