லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் இளம்பெண் உள்பட நான்கு பெண்கள், தங்களைச் சுற்றி நிற்கும் மக்களிடம் தங்களின் நிர்வாணத்தை மறைக்க ஆடையை தரும்படி கெஞ்சும் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
அவர்கள் ஏறத்தாழ ஒருமணிநேரமாக தெருவில் நிர்வாணமாக நிற்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கள்கிழமை (டிச.6) நடந்துள்ளது. இதன், காணொலி வைரலானதை அடுத்து, பஞ்சாப் மாகாணம் காவல் துறை தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஐவர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கியமான ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக காவல் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாள்ர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றத்திற்கு ஏற்ற பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறுகையில், "நாங்கள் குப்பைகளை பொறுக்க பைசாலாபாத் பாவா சாக் சந்தைக்குச் சென்றோம். அப்போது எங்களுக்கு மிகவும் தாகம் எடுத்ததால், அங்கிருந்த உஸ்மான் எலெக்ட்ரிக் கடையின் உள்ளே சென்று தண்ணீர் கேட்டோம்.
நிர்வாணமாக்கி அடித்துச் செல்லப்பட்டோம்
ஆனால், அக்கடையின் உரிமையாளர் சதாம் நாங்கள் உள்ளே வந்ததன் நோக்கம் திருடுவதற்குதான் எங்கள் மீது குற்றஞ்சாட்டினார். சதாம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்கள் எங்களை அடித்தனர். எங்களை அடித்து சந்தைப்பகுதிகளில் இழுத்துச்சென்று, ஆடைகளில் களைந்தனர். மேலும், எங்களின் ஆடைகளை களைவதை காணொலி எடுத்தனர்.
இதை அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து பைசலாபாத் காவல்துறை தலைவர் அபித் கான் கூறுகையில்,"குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான சதாம் உள்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிலரை தேடும் பணியும் நடைபெறுகிறது" என்றார்.
இதையும் படிங்க: Bipin Rawat Helicopter Crash Updates: முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து!