ETV Bharat / bharat

எஸ்.யூ.வி. கார் மரத்தில் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

புவனேஸ்வர்: கியோஞ்சர் மாவட்டத்தின் அருகே எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் எஸ்.யூ.வி. காரில் பயணம்செய்த 11 பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

car accident
car accident
author img

By

Published : Dec 31, 2020, 9:31 AM IST

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தின் காவல் துறை எல்லைக்குள்பட்ட சோமகிரி அருகே எஸ்.யூ.வி. கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 11 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 7 பேரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த அனைவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள ஹதாபடாலா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், கியோஞ்சர் மாவட்டத்திலுள்ள ஹரிச்சந்தன்பூர் அருகே உள்ள ஜிராங் என்ற பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.