ETV Bharat / bharat

கால்வாயில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழப்பு! - Madhya Pradesh news in Hindi

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்தனர்.

Omkareshwar Dam
Omkareshwar Dam
author img

By

Published : Apr 20, 2022, 2:01 PM IST

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஷ்வர் பகுதியில் உள்ள கோதி கிராமத்தில் சாத்வி ரிதம்பராவின் பீதாம்பரேஷ்வர் ஆசிரமம் உள்ளது.

இந்த ஆசிரமத்தின் அருகே ஓம்காரேஷ்வர் அணையின் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயின் கரையில் ஒரு குளிக்கும் இடம் உள்ளது. இங்கு இன்று (ஏப்.20) காலை 6 மணியளவில் 6 சிறுமிகள் குளிக்கச் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கு கரையில் கட்டியிருந்த சங்கிலியைப் பிடித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி, அதீத நீரோட்டம் காரணமாக சங்கிலியை விட்டுவிட்டார். இந்த நிலையில் அவளை காப்பாற்ற மற்றொரு சிறுமி உள்ளே குதித்தாள்.

இருவரும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற, மற்றுமொரு சிறுமி என ஒருகட்டத்தில் 6 சிறுமிகளும் ஆற்றில் மூழ்கினர். இந்தச் சிறுமிகளின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இரண்டு சிறுமிகளை உயிருடன் மீட்டனர்.

மற்ற 4 சிறுமிகளை காப்பாற்ற முடியவில்லை. கால்வாயில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுமிகளும் 10 முதல் 12 வயது கொண்டவர்கள் ஆவார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.