உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் ராணுவ கல்லூரியில் பயிற்சி முடிந்த 395 இளம் வீரர்கள் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பிறகு, இந்திய ராணுவத்தில் பணியில் நியமிக்கப்பட உள்ளனர். ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ், மாலத்தீவு, தஜிகிஸ்தான், பிஜி உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 70 பேரும் தங்களின் பயிற்சியை நிறைவு செய்கின்றனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் உடன் பேசிய இளம் ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், இந்திய ராணுவ அலுவலராக நியமிக்கப்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் பயிற்சி சற்று கடினமாக இருந்தது. பிறகு அது எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் தேசத்திற்காக சேவை செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதுவரை, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 2,413 அலுவலர்கள் உட்பட 62 ஆயிரத்து 139 தேசிய மற்றும் வெளிநாட்டு அலுவலர்களுக்கு இந்திய ராணுவ அகாதமி பயிற்சி அளித்துள்ளது.
இதையும் படிங்க:இளம் ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி!