தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ராணுவ தின பேரணியில் பங்கேற்ற ராணுவத் தளபதி எம்.எம். நரவனே, வீரர்களிடையே பேசினார். அப்போது அவர், "எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறலில் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதை முறியடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் ராணுவ நடவடிக்கையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தான் தற்போது 300-400 பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து ஊடுருவ தயாராகவுள்ளது.
ராணுவ தளவாடங்களை நவீன மையமாக்கும் திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 29 திட்டங்களுக்கு சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்