ETV Bharat / bharat

நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்ட 25 மருத்துவர்களுக்கு உடல்நலக்குறைவு.. லக்னோவில் நடந்தது என்ன?

lucknow doctors Food Poisoning:லக்னோவின் ஹூசைன்கஞ்ச் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்ட 25 மருத்துவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆய்வு செய்ய தலைமை மருத்துவ அதிகாரி அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

food poisoning
நட்சத்திர ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 25 மருத்துவர்களுக்கு உடல்நலக்குறைவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 1:22 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஹூசைன்கஞ்ச் (Hussainganj) பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வருகை தந்தனர். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட மருத்துவர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

பின்னர், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களைச் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவல், தலைமை மருத்துவ அதிகாரி அகர்வாலுக்குத் தெரிய வந்தது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மருத்துவர்கள் சாப்பிட்ட உணவகத்தில் உணவு மாதிரிகளைச் சேகரிக்க மருத்துவக் குழு விரைந்தது.

இது குறித்து ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரி சந்திரமணி மிஷ்ரா கூறியதாவது, "உணவு சாப்பிட்டதால் மட்டுமே மருத்துவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவில்லை. இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேசம் மாநிலம், 29 மாவட்டங்களிலிருந்தும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஹூசைன்கஞ்ச் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பான தகவலை மறுத்துள்ளனர். இந்த வகையில் சம்பவம் குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கருதியதுடன் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து குணமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:Karnataka Bandh: கர்நாடகாவில் இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.