லக்னோ: ராமாயணத்தை தழுவி எழுதப்பட்ட ராம்சரித்மனாஸ் நகலை எரித்ததன் காரணமாக 2 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் மற்றும் சத்யேந்திரா ஆகியோர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், ’சமாஜ்வாதி கட்சியின் எம்எல்சி சுவாமி பிரசாத் மவுரியா உட்பட 10 பேர் மீது ராம்சரித்மனாஸ் நகலை எரித்ததன் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோ மாவட்ட நீதிமன்றத்துக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த லவி என்கிற சத்னம் சிங் கொடுத்தப் புகாரின் பேரில் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்தப் புகாரில் ராம்சரித்மனாஸ் நகலை எரித்து மக்களின் உணர்வுகளையும், வகுப்புவாத கலவரங்களையும் தூண்டவும் முயல்கின்றனர்.
இந்தப் புகாரை அடுத்து சாய்னிக் நகரை சேர்ந்த சத்யேந்திரா குஷ்வாஹா, அலாம்பாக்கை சேர்ந்த யஷ்பால் சிங், சவுத் சிட்டியை சேர்ந்த பிரதாப் யாதவ், நரேஷ் சிங், மற்றும் சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
சமாஜ்வாதி கட்சியின் எம்எல்சி சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அகில இந்திய ஒபிசி மகாசபா அமைப்பு ஜனவரி 29ஆம் தேதி விருந்தாவன் யோஜனா திராஹே போலீஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போதும் ராம்சரித்மனாஸ் நகலை எரித்தனர்.
இதையும் படிங்க: JEE Main 2023: தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!